Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":

Home -- Tamil -- 08. Good News -- 5 Why don't Muslims trust the Bible?

This page in: -- Chinese -- English -- French -- German? -- Indonesian -- TAMIL -- Turkish

Previous lesson -- Next lesson

08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

5 - முஸ்லிம்கள் ஏன் வேதாகமத்தை நம்புவதில்லை?



சவால்: பல முஸ்லிம்கள் இஸ்லாத்தைவிட்டு கிறிஸ்தவர்களாக மாறியிருக்கிறார்கள். இருப்பினும் நற்செய்தியில் உள்ள அவர்களுடைய விசுவாசத்தைவிட்டுவிட்டு இஸ்லாத்திற்குத் திரும்பும்படி அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள். ஏன் இந்தக் கிறிஸ்தவர்கள் குரானை விசுவாசிக்கும்படி மறுபடியும் செல்லக்கூடாது என்பதற்கான வாதங்களையும் காரணங்களையும் இவர்களுக்குச் சொல்வது முக்கியமானது. முன்னால் முஸ்லீம்கள் மறுபடியும் முஸ்லீம்களாக மாறாமல் இருப்பதற்கான காரணங்கள் ஏதேனும் உண்டா? குரானின் அடிப்படையில் அப்படிப்பட்ட வாதங்கள் எதையும் காணமுடியுமா?

பதில்: ஆம். அப்படிப்பட்ட வாதங்களும் காரணங்களும் இருக்கின்றன. முஸ்லீம்கள் ஏன் வேதாகமத்தை நம்புவதில்லை என்பதற்கான காரணத்தைப் பார்க்கும்போது இவை வெளிப்படுகிறது. வேதாகமத்திற்கும் குரானுக்கும் இடையில் மாபெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன என்ற உண்மையில் மிக முக்கியமான காரணம் அடங்கியிருக்கிறது. பரதீஸிலுள்ள ஒரு மூலாதாரமான நூலிலிருந்துதான் அல்லாஹ் தமது தூதர்களுக்கு இறக்கிக்கொடுத்த அனைத்து நூல்களும் வந்திருக்கிறது என்றுதான் முஸ்லீம்கள் நம்புகிறார்கள். ஆகவே அவர்கள் தவ்ராத், சங்கீதங்கள், நற்செய்தி நூல்கள் மற்றும் குரான் ஆகியவற்றிற்கு இடையில் பெரிய வித்தியாசத்தை எதிர்பார்ப்பதில்லை. இருப்பினும் அந்த நூல்களை நாம் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தீர்க்கமான வித்தியாசங்கள் காணப்படுகிறது. இந்த வித்தியாசங்களை விளக்குவதற்காக முஸ்லிம்கள் மோசே, தாவீது, கிறிஸ்து ஆகியோருடைய மூல நூல்களை யூதர்களும் கிறிஸ்தவர்களும் திருத்தி எழுதிவிட்டார்கள் என்ற பொய்யான இறையியலை முன்வைக்கிறார்கள். அதனால்தான் முஸ்லிம்கள் வேதாகமத்தை நம்பாமல் குரானை மட்டும் நம்புகிறார்கள். அவர்களுடைய நூல் நேரடியாக அல்லாஹ்விடமிருந்து கொடுக்கப்பட்டது என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை குரானில் காணப்படும் மூல வெளிப்பாடுகளை உள்ளடக்கிய பகுதிகளைப் போல வேதாகமத்தில் எந்த இணையும் கிடையாது. குரானுடைய இப்படிப்பட்ட பகுதிகள் பலவற்றிற்கு இஸ்லாத்திற்கு முந்தைய காலத்திலுள்ள எழுத்துக்களில் இணை இருக்கிறது என்பதை நாம் இப்போது காண்பிக்க இருக்கிறோம். இந்த வாதங்கள் குரான் அல்லாஹ்விடமிருந்து வந்த தூய்மையான வெளிப்பாடு என்ற அவர்களுடைய நம்பிக்கையை பலவீனப்படுத்துவதாக உள்ளது. இவற்றினால் முன்பு முஸ்லிம்களாக இருந்தவர்கள் மீண்டும் இஸ்லாத்திற்கு திரும்பாதபடிக்கும், தற்போது முஸ்லிம்களாயிருப்பவர்கள் இஸ்லாத்தைக் கைவிடுவதற்கான கேள்விகளைக் கேட்கும்படியும் தூண்டப்படுவார்கள்.

வேதாகமத்தை குரானுடன் ஒப்பிடும்போது நான்கு வகையான பாடங்களை நாம் காணலாம். உதாரணத்தின் மூலம் இதை விளக்குவதற்காக நாம் குரானிலும் வேதாகமத்திலும் ஆபிரகாமைக் குறித்த விபரங்களை மட்டும் கவனிக்கலாம்.

1. வேதாகமத்தில் இணையில்லாத குரானிய பாடங்கள்: வேதாகமத்திலிருந்து நேரடியாக வந்தது என்று சொல்ல முடியாத பல கதைகளை குரான் கொண்டிருக்கிறது.

உதாரணமாக ஈசாக்கின் பிறப்பை அறிவிப்பதற்காக இறைவனுடைய தூதுவர்கள் ஆபிரகாமைச் சந்தித்தல் (சுரா ஹுது 11:69-73 மற்றும் அல் ஹிஜ்ர் 15:51-60 = ஆதியாகமம் 18:1-22அ), அல்லது ஆபிரகாமுடைய மகனைப் பலியிடுதல் (சுரா அல் ஸஃப்ஃபாத் 37:101-113 = ஆதியாகமம் 22:1-19) ஆகியவற்றைப் பற்றி குரான் பேசுகிறது. ஆயினும் குரானிலுள்ள ஒரு வேதப் பகுதிகூட வேதாகமத்திலிருந்து வரும் நேரடியான எழுத்தின்படியான மேற்கோளாக இல்லை. குரான் எப்போதுமே வேதாகமப் பாடங்களை தன்னுடைய சொந்த வார்த்தைகள் இஸ்லாமிற்கு ஏற்றவாறுதான் எடுத்துரைக்கும். அதனால்தான் குரானுக்கும் வேதாகமத்திற்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பொறுத்தவரையில் சில பல வேறுபாடுகள் காணப்படுகிறது.

தவ்ராத்திலும் இன்ஜீலிலுமிருந்து வரும் இணையான பாடங்களையே குரான் முதன்மையாகக் கொண்டுள்ளது.

2. வேதாகமப் பாடங்களுக்கு குரானில் இணையான பகுதிகள் இல்லை. வேதாகமத்தில் ஐந்தில் ஒரு பங்கே குரான் என்பதால் வேதாகமத்தின் 80 சதவீதமான பகுதிகளுக்குக் இணையானவை குரானில் இருக்க முடியாது.

ஆபிரகாமைக் குறித்த வேதபகுதிகளை எடுத்துக்கொண்டால் குரானில் வம்ச வரலாறுகள் இல்லை (ஆதியாகமம் 11:10-27), அல்லது பெண்கள் முக்கிய பங்காற்றும் பகுதிகள் இல்லை (உதாரணமாக எகிப்தில் ஆபிரகாமும் சாராளும் (ஆதியாகமம் 12:10-20); சாராளுடைய மரணமும் அவளை அடக்கம் செய்வதற்கான நிலத்தை ஆபிரகாம் வாங்குவதும் (ஆதியாகமம் 23:1-20); அல்லது கேத்தூராளுடன் ஆபிரகாமிற்கு இரண்டாவது திருமணம் (ஆதியாகமம் 25:1-6).

கிட்டத்தட்ட தவ்ராத்திற்கும் இன்ஜீலுக்கும் வெளியே உள்ள வேதாகமத்தின் பகுதிகள் அனைத்தும் குரானில் விடப்பட்டுள்ளன.

3. வேதாகமத்தில் இல்லாத குரானிய வேதபாடங்கள் குரானுக்கு முந்திய காலத்திலுள்ள பாடங்களுக்கு ஒத்திருக்கிறது. இந்தக் குரானிய பாடங்கள் முஸ்லிம்களை அதிகம் பாதிக்கிறது. குரானிலுள்ள பாடங்கள் இஸ்லாத்திற்கு முந்திய காலத்து எழுத்துக்களுக்கு இணையானது என்பதற்கான ஆதாரங்கள், ஆராய்ச்சி செய்யும் முஸ்லிம்களுக்கும் முன்னால் முஸ்லிம்களுக்கும் குரான் மீதான தங்கள் நம்பிக்கையைத் துறப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆபிரகாம் கல்தேயருடைய ஊர் என்ற பட்டணத்தைவிட்டு கானானுக்குப் புறப்படுவதற்கு முன்பாக அவருடைய வாழ்க்கையில் நடைபெற்றதாக சில நிகழ்வுகளை குரான் குறிப்பிடுகிறது. உதாரணமாக ஆபிரகாம் நெருப்புச் சூழைக்குள் எறியப்பட்டு இறைவனால் மீட்கப்பட்டதாக குரான் குறிப்பிடுகிறது (சுராக்கள் அல் அன்பியா 21:68-70 மற்றும் அல் ஸஃப்ஃபாத் 37:97-98). இந்தக் கதை வேதாகமத்தில் காணப்படவில்லை. ஆனால் இதற்கு இணையான கதைகள் முகமது பிறப்பதற்கு முன்பாகவே இருந்த ரபித்துவ யூத மார்க்கத்தின் பாபிலோனிய தல்முத்தில் காணப்படுகிறது. உதாரணமாக பெஷாஹிம் 118ஆ அல்லது மித்ராஸ் (ராபா ஆதியாகமம் 44:18). அரேபியாவிலிருந்த யூதர்கள் மூலமாக இஸ்லாத்தின் தீர்க்கதரிசி இந்தக் கதைகளைக் கேள்விப்பட்டிருக்க வேண்டும். அவர்களை இஸ்லாத்திற்குள் கொண்டு வருவதற்காக யூதப் புராணங்களை குரானில் அவர் சேர்த்தார். இது மட்டுமன்றி முகமது யூத மற்றும் கிறிஸ்தவ துர்ப்போதகங்களையும் குரானில் சேர்த்தார். இந்த வகையில் அவர் யூத-ஞான மார்க்கம், யூத-கிறிஸ்தவ மார்க்கம் மற்றும் கிறிஸ்தவ ஞான மார்க்கம் ஆகியவற்றின் கலவையாகிய ஒரு மதத்தையே குரான் முன்வைக்கிறது. இந்தப் போதனைகள் இன்று பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் தள்ளுபடியாகமங்களில் காணப்படுகிறது. ஆதாம் படைக்கப்பட்டவுடனேயே தேவதூதர்கள் அவனை வணங்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டதாகவும், பிசாசைத் தவிர மற்ற தூதர்கள் அனைவரும் அதற்குக் கீழ்ப்படிந்ததாகவும், அதனால் பிசாசு பரலோகத்தைவிட்டு துரத்தப்பட்டதாவும் குரான் கூறுகிறது (சுரா அல் அஃராஃப் 7:11-18 மற்றும் வேறுசில பகுதிகள்). “ஆதாம் ஏவாளுடைய வாழ்க்கை” என்ற தள்ளுபடியாகம பாடத்திலிருந்து இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. இதைக் கிறிஸ்தவர்களோ யூதர்களோ ஏற்றுக்கொள்ளவில்லை. இதை அவர்கள் கிறிஸ்துவுக்குப் பின் முதலாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஞான மார்க்க-யூத துர்ப்போதனை என்று இதை நிராகரிக்கிறார்கள்.

4. வேதாகமத்திலேயோ அல்லது இஸ்லாத்திற்கு முந்திய எழுத்துக்களிலோ காணப்படாத குரானிய பாடங்களே குரானின் உண்மையான இஸ்லாமியப் பாடங்கள் ஆகும்.

உதாரணமாக ஆபிரகாமும் அவருடைய மகனாகிய இஸ்மாயிலும் மெக்காவிலுள்ள காபாவை நிறுவினார்கள் என்றும் அவர்கள்தான் முதல் முஸ்லிம்கள் என்றும் குரான் கருதுகிறது (சுரா அல் பகரா 2:127-132). இதைப் பற்றிய எந்தத் தகவலையும் யூதர்களுடைய வேதத்திலோ கிறிஸ்தவர்களுடைய வேதத்திலோ காணமுடியாது.

யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் மட்டுமல்ல, சிலைவழிபாடு செய்பவர்களையும் துர்ப்போதனைகளைப் பின்பற்றுபவர்களையும் தன்னுடைய இஸ்லாத்திற்கு ஆதாயப்படுத்தும்படியான முகமதுவின் முயற்சியாகவே நாம் இந்த குரானிய பாடங்களைப் பார்க்கிறோம். சமய சமரசக் கோட்பாட்டினால் குரான் எவ்விதமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை இது காண்பிக்கிறது.

துக்க செய்தி: யூதர்களோ கிறிஸ்தவர்களோ பரிசுத்த வேதாகமத்தை மாற்றியமைக்கவில்லை. மாறாக வேதாகமத்தின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமாக நாம் குரானைப் பார்க்க முடியும். அதில் வேதாகமத்திலுள்ளதும் வேறு மூலங்களிலுள்ளதுமான பல காரியங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே அது அநேக புனைக் கதைகளையும் கற்பனையான வாதங்களையும் தன்னில் கொண்டுள்ளது. அவைகள் உண்மை என்று முஸ்லிம்கள் நம்புவதால் அவர்கள் வேதாகமத்தைப் புறக்கணிக்கிறார்கள்.

நல்ல செய்தி: உயிருள்ள இறைவனுடைய உண்மையினாலும் நேர்மையினாலும் தீர்மானிக்கப்பட்ட எழுத்துக்களை மட்டுமே வேதாகமம் கொண்டிருப்பதால் அதை நாம் நம்ப முடியும். வேதாகமத்தை எழுதிய சாட்சிகள் அதை எழுதும்போது அவர்களை வழிநடத்திய சத்திய ஆவியானவருக்கு பொய்களும் கற்பனைப் புனைக்கதைகளும் சற்றும் ஏற்காதவை.

சாட்சி: என்னுடைய பெயர் பௌசி, நான் மொராக்கோ நாட்டில் வாழ்கிறேன். நான் ஆரம்பப் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாகவே குரான் பள்ளிக்கு என்னுடைய தகப்பனாரால் அனுப்பப்பட்டேன். அங்கு நான் குரானை மனப்பாடம் செய்தேன். நான் ஒரு மாணவனாக இருக்கும்போதே ஐந்து வேளை தொழுகை செய்வேன். நான் இஸ்லாமிய வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பேன். ஒரு நாள் நான் ஒரு புதிய வானொலி நிகழ்ச்சியைக் கேட்க நேர்ந்தது. அதை நான் கேட்டபோது அது ஒரு கிறிஸ்தவ நிகழ்ச்சி என்றும் அதில் வேதாகமத்தின் வசனங்கள் ஒலிபரப்பப்படுகிறது என்றும் அறிந்துகொண்டேன். அது என்னைத் துக்கப்படுத்தியது. என்னுடைய தொழுகையை முடித்துவிட்டு அந்த வானொலி நிகழ்ச்சியை தாக்கி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்திற்கு பதில் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து அந்த வானொலி நிலையத்திலிருந்து எனக்கு ஒரு பதில் கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னைக் கடிந்துகொள்ளாமல் அன்பான வார்த்தைகளை எழுதியிருந்தார்கள். நான் மறுபடியும் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தொடர்பு நீண்டு கொண்டே போனது. அதன் மூலமாக நான் குரானையும் வேதாகமத்தையும் பற்றிய பல இலக்கியங்களைப் பெற்றுக்கொண்டேன். அந்த இலக்கியங்களை என்னுடைய பள்ளிவாசல் இமாமிடம் எடுத்துச் சென்றேன். இந்தக் கிறிஸ்தவ இலக்கியங்களில் இஸ்லாத்தைப் பற்றி தவறாக எதுவும் எழுதப்படவில்லை என்று அவர் என்னிடம் சொன்னார். ஆனால் குரானிலுள்ள பல பகுதிகள் இஸ்லாத்துக்கு முந்திய காலத்து இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டவை என்பதைப் பற்றிய நூல் என்னை அதிகம் பாதித்தது. இதன் காரணமாக நான் இஸ்லாத்தைப் பற்றி சந்தேகம்கொள்ள ஆரம்பித்தேன். ஆயினும் இன்னும் ஒருமுறை கடைசியாக என்னுடைய சமயம் உண்மையானதா என்பதைச் சோதித்தறிய நினைத்தேன். நான் ஒரு அறைக்குள் சென்று சில மாதங்களாக வெறும் அப்பத்தோடும் தண்ணீரோடும் வாழ ஆரம்பித்தேன். அப்போது நான் சூபி இஸ்லாத்தின் கடுமையான நோன்பு முறைகள் மூலம் நேரடியாக அல்லாஹ்வின் தொடுதலை உணர முயன்றேன். இதுவும் எந்தப் பயனையும் தராத காரணத்தினால் நான் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்துவிடம் திரும்பினேன்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே இஸ்லாத்திற்கு முந்தின காலங்களில் காணப்பட்ட கிறிஸ்தவ துர்ப்போதனைகளுக்காக நாங்கள் மனம்வருந்துகிறோம். இஸ்லாத்திற்கு முகமது மட்டுமல்ல, அவரைப் பாதித்த இஸ்லாத்திற்கு முந்தைய கிறிஸ்தவ துர்உபதேசிகளும் காரணமானவர்கள். உம்முடைய சத்தியத்தில் உண்மையாக நிலைத்திருக்கவும் புனைக்கதைகளை பின்பற்றாதிருக்கவும் எங்களுக்கு உதவிசெய்யும். அப்போது நாங்கள் தவறான போதனைகளிலிருந்து தப்புவோம்.

கேள்விகள: இஸ்லாத்திற்கு முந்தைய எந்த நூல்களின் பாதிப்புகளை நாம் குரானில் காண்கிறோம்? முஸ்லிம்கள் வேதாகமத்தை ஏன் நம்புவதில்லை?

மனப்பாடம்: தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. (எபிரெயர் 4:12).

www.Grace-and-Truth.net

Page last modified on June 07, 2013, at 11:17 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)