Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 09. Comparisons -- 4.10 Eighth Commandment: Do Not Steal

Previous part -- Next part

09. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் – ஒப்பாய்வு
Comparisosns 4 - பத்து கட்டளைகள்

4.10 - எட்டாவது கட்டளை: களவு செய்யாதிருப்பாயாக



யாத்திராகமம் 20:15
“களவு செய்யாதிருப்பாயாக”
(யாத்திராகமம் 20:15)


4.10.1 - சொத்துகள் யாருக்கு சொந்தம்?

ஆதியிலே இறைவன் வானங்களையும், பூமியையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். எல்லா கனிம வளங்கள், தாவரங்கள், மிருகங்கள் மற்றும் நாமும் கூட அவர் ஒருவருக்கே சொந்தம். நாம் இறைவனுக்கு சொந்தமானவர்கள் நாம் தற்செயலாய் உருவானவர்கள் அல்ல, இறைவனுடைய கிருபையினால் உருவானவர்கள். ஒவ்வொரு படைப்பிலும் அவரது சிந்தனைகள் மற்றும் வல்லமைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவனே இந்த பிரபஞ்சத்தின் உரிமையாளர் ஆவார். அவர் ஒருவருக்கே பொன், வெள்ளி மற்றும் அனைத்துப் பொருட்களும் சொந்தம். நம்மை நம்பி அவர் கொடுத்துள்ள அனைத்திற்கும் நாம் உக்கிராணக்காரர்கள் மட்டுமே. அவர் நமக்குக் கொடுத்துள்ள அனைத்திற்கும் நாம் பொறுப்புள்ளவர்கள். நம்முடைய நேரம் ஆரோக்கியம், வல்லமை, பணம், சொத்து அனைத்தும் நமக்கு சொந்தம் அல்ல, அவர் ஒருவருக்கே சொந்தம். நீங்கள் இதை ஒத்துக்கொள்கிறீர்களா?

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாத்திக கொள்கைகள் ஆவியின் செயல்பாட்டை மறுதலித்தன. அவர்கள் பருப்பொருளை மட்டுமே நம்பினார்கள். அது தானாகவே இயங்குகிறது என்று கூறினார்கள். அவர்கள் இறைவனைக் குறித்து சிந்திப்பதே இல்லை. எனவே தான் இந்த உலகம் மக்களுக்குச் சொந்தம், இறைவனுக்கு அல்ல என்று கம்யூனிசவாதிகள் கூறினார்கள். ஆளும்கட்சி அனைத்து சொத்துக்கள் மீதும் அதிகாரம் செலுத்தி, அவைகளை முடக்கி வைக்கும். இவைகள் அனைத்தையும் பகிர்ந்து கொடுப்பதாகக் கூறும், ஆனால் இந்தக் கூட்டுத் தத்துவத்தில் தனிநபர்கள் குறைவான ஆர்வத்துடன் தான் உள்ளார்கள். ஆகவே அவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கும் குறைவாகவே வேலை செய்கிறார்கள். இவ்விதமாக நாட்டின் சொத்து சூறையாடப்படுகிறது. எனவே தான் சீனா மற்றும் பிற சோஷலிச நாடுகள் சமூகம் சாரா பணிகள் மற்றும் தனியார் பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர். பொருளாதார …… என்பது மனிதன் எந்தவொரு கூட்டு சமூக அமைப்பிற்காகவும் உருவாக்கப்பட்டவன் அல்ல என்பதை வெளிப்படுத்துகிறது. ஆரம்பத்திலிருந்து நாம் அனைத்திற்கும் பொறுப்புள்ளவர்களாக படைக்கப்பட்டவர்கள் என்று நாம் கருதுகிறோம். மனிதன் தானாக இயங்க வேண்டியவனாக இருக்கிறான். முதலாளித்துவம் கம்யூனிச முறையை நசுக்குகின்றது.

மேலை நாடுகளில் முதலாளித்துவம் என்பது ஒவ்வொருவரும் அவரது சொந்த நேரம் மற்றும் பணத்திற்கு எஜமான் என்று பொருள்படுகிறது. பெரும்பணக்காரர்கள் மிகப்பெரிய கேக்கை தங்களுக்குள் பிரிக்கும் போது சிதறும் சில துண்டுகளை ஏழைகளுக்கு உறுதிப்படுத்த ஜனநாயக சமூக அமைப்பு முயற்சிக்கிறது. இந்த மில்லினியர்கள் தங்கள் பொறுப்பை இறைவனுக்கு முன்பாக உணர வேண்டும். அவரிடம் மனந்திரும்ப வேண்டும். அப்பொழுது அவர்கள் ஏழைகளின் தேவைகளை உணருவார்கள். அந்த சிறியோரைக் குறித்து சிந்தித்து, அவர்களது தேவையை சந்திப்பார்கள்.

உண்மையில் கம்யூனிசமும், முதலாளித்துவமும் ஒரே இலக்குகளை கொண்டுள்ளன. இரண்டுமே அனைத்து சொத்து மற்றும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன. அந்த செல்வங்கள் மீதான அதிகாரத்தை அடையும் வழி முறையில் தான் அவை வித்தியாசப்படுகின்றன. சோஷலிச நாடுகளில் சொத்துகளை அரசாங்கம் எடுத்துக் கொள்வது கொள்ளையடிப்பதைத் தவிர வேறில்லை. முதலாளித்துவ நாடுகளில் நவீன ஊடகங்களைப் பயன்படுத்தி காட்டிக் கொடுத்தலின் ஒரு நவீன வடிவமாக ஏழைகள் நசுக்கப்படுகிறார்கள்.

எப்படியிருப்பினும் ஒரு கிறிஸ்தவன் அனைத்து சொத்துகளும் படைத்தவருக்கே சொந்தம் என்பதை உணரவேண்டும். நாம் சொந்தக்காரர்கள் அல்ல, எஜமானர்களும் அல்ல. நாம் உக்கிராணக்காரர்கள் மட்டுமே. எதுவும் நமக்கு சொந்தம் அல்ல. நம்மிடத்தில் இருக்கும் அனைத்தும் இறைவனுடைய ஆசீர்வாதம் ஆகும். நம்முடைய பணம், நேரம் மற்றும் முயற்சியைக் குறித்து நாம் கணக்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் செய்வதைக் குறித்தும், நீங்கள் செலவழிப்பதைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்.


4.10.2 - இறைவனை நேசிப்பதும், பணத்தை இச்சிப்பதும்

இயேசு நம்மை எச்சரிக்கிறார். “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.(மத்தேயு 6:24) இறைவனுடைய பாதத்தில் தன்னுடைய சொந்த பணத்தை ஒருவன் போட்டுவிடாத பட்சத்தில், அவன் கிறிஸ்தவனாக செயல்பட முடியாது. இல்லையென்றால் அவன் தன்னுடைய எஜமானிடம் கொள்ளையிடும் திருடனைப் போல் இருப்பான். இந்தக் காரணத்தினால் தான் நாம் கிறிஸ்தவர்களாக மாறும்போது நாம் பணத்தைக் கையாளும் முறையும் மாறுகின்றது. வசதிமிக்க கிறிஸ்தவர்கள் தங்களுக்காக வாழும்படி திட்டம் பண்ணக் கூடாது. அவர்களை நம்பி இறைவன் ஒப்புவித்துள்ள பணத்தை எவ்விதம் செலவழிக்க அவர் விரும்புகிறார் என்று கேட்க வேண்டும்.

குறைந்த தொழில் வளர்ச்சியைக் கொண்டுள்ள வளரும் நாடுகளுக்கு முதலாவது தேவை ஆவிக்குரிய ஒரு விழிப்புணர்வு ஆகும். திரியேக இறைவனில் வைக்கும் விசுவாசம், பொறுப்பு, கடமை மற்றும் தியாகமுள்ள மனப்பான்மையை வலியுறுத்துகிறது. இயேசுவுடனான உறவு மட்டுமே மக்கள் கறைபடாதபடி காக்கப்படவும் அல்லது தங்கள் சொந்த குடும்பங்களுக்காக மட்டுமே உழைப்பதைத் தடுக்கவும் செய்கிறது. அப்போது அவர்கள் மற்றவர்களின் தேவைகளைப் பார்க்கவும், உணரவும் செய்கிறார்கள். அவர்களது மனப்பான்மை மாறவில்லையெனில், சோம்பேறித்தனம், திருட்டு மற்றும் தீவிரவாதம் தொடரும். நம்முடைய உலகிற்கு கிறிஸ்து மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருக்கிறார்.

வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. “களவு செய்யாதிருப்பாயாக”. இதன் மூலம் தனிப்பட்ட சொத்து குறித்த பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. நாம் மற்றவர்களின் செல்வத்தைப் பார்த்து பொறாமைப்படக்கூடாது. அவனது செல்வம் பெருகும் போது நித்திய பொறுப்பும் அதிகரிக்கிறது. இயேசு இந்தக் கட்டளையைக் குறித்து இவ்விதம் விவரித்துச் சொன்னார். மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 19:24). வசதி படைத்தவர்களிடம் இருந்து திருடுவது நியாயம் ஆகாது. ஏனெனில் திருடுகிற ஒவ்வொருவரும் நீதியுள்ள இறைவனின் நியாயத்தீர்ப்பு முன்பு நிற்க வேண்டும்.

நம்முடைய உள்ளான மனதில் நாம் மற்றவர்களுக்குரியதை எடுக்கக்கூடாது என்று நினைக்கிறோம். நம்முடைய மனச்சாட்சி மிகவும் தெளிவாக உணர்த்துகிறது. பெரியதோ அல்லது சிறியதோ, எதையும் நாம் திருடக்கூடாது என்று நம்மை எச்சரிக்கின்றது. நம்மை நாமே கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். நம்முடையது அல்லாத எதுவும் நம்மிடம் உள்ளதா என்று கவனமாகப் பார்க்க வேண்டும். உங்களுக்குரியது எது, மற்றவர்களுக்குரியது எது என்று நாம் உணரும்படி ஆண்டவர் நிச்சயம் நமக்கு உதவுவார். நீங்கள் அவரிடம் அதைக் கேட்க வேண்டும். நாம் இறைவனிடமும், பொருளை உடையோரிடமும் மன்னிப்பைக் கேட்க வேண்டும். திருடப்பட்ட பொருட்கள் நம்முடைய மனச்சாட்சியைப் பாதிக்கும். இயேசுவுடனான நம்முடைய உறவை அழிக்கும். ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நற்செய்திக் கூட்டத்தில், மக்கள் தாங்கள் திருடிய பொருட்களையெல்லாம் திருப்பித்தரும்படி வழிநடத்தப்பட்டார்கள். அந்த சூழ்நிலையில் அங்கிருந்த காவல்காரர்கள் சிரித்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் திருடியவர்கள் என்று அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட காரியங்கள் எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது. நம்முடைய பாவத்தை நாம் அறிந்து, மனம்வருந்தி, அதை வெறுப்பது இறைவனுடைய சிறப்பான கிருபையினால் நடைபெறும். உண்மையாக நாம் மனந்திரும்பி, அதை அறிக்கையிட்டு, நாம் காரியங்களை சரிசெய்யவேண்டும். இயேசுவிடம் திரும்புங்கள். உங்களால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய, அவர் உங்களுக்கு உதவுவார். உங்களுடையதல்லாத அனைத்தையும் விரைவாக திருப்பிக் கொடுங்கள்.


4.10.3 - நவீனத் திருட்டு

நம்மை நாமே கேட்டுப் பார்ப்போம். இன்றைய நாட்களில் திருட்டு என்றால் என்ன? வெறுமனே மற்றவர்களின் பொருட்களை எடுப்பது மட்டுமல்ல. அது வேலையின் போது நேரத்தை வீணடிப்பதும் ஆகும். ஏமாற்றுவதின் ஒவ்வொரு வடிவமும் திருட்டு ஆகும். குறைபாடுள்ள பொருட்களை விலைக்குறைவாக விற்பது அல்லது விலை அதிகமாக வைத்து ஏமாற்றி விற்பதும் திருட்டு ஆகும். நியாயமான லாபம் இல்லாமல் அதிகமான லாபம் வைத்து விற்பதும் களவு ஆகும். வருமானதுறைக்கு தவறான தகவல்கள் தருவதும் களவு ஆகும். வேலை மற்றும் பணம் சார்ந்த வழிகளில் நடைபெறும் அநேக ஏமாற்று வேலைகளும் களவு ஆகும். நீங்கள் பரிசுத்தமுள்ள இறைவனின் பிரசன்னத்தில் வாழாவிட்டால், அவருக்கும், அவருடைய மக்களுக்கும் எதிராக பாவம் செய்யக் கூடிய மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள்.

இதேவித மனச்சாட்சியைக் குறித்து இந்த பரீட்சையானது நில உரிமையாளர்கள், வியாபாரத்தில் உள்ள மேலதிகாரிகள் மற்றும் உயர்பதவியில் உள்ளோர் அனைவருக்கும் பொருந்தும், அவர்கள் வேலையாட்கள் மீது அதிக உரிமை எடுத்துக்கொள்வதும், அவர்கள் வேலைக்குரிய நியாயமான கூலி கொடுக்காமல் இருப்பதும் களவு ஆகும். வங்கிகள் மற்றும் தனிநபர்கள் அதிக வட்டிகளைக் கேட்கும்போது அது திருட்டுக்கு சமமாக உள்ளது. ஒருவர் திரும்பித் தர இயலாது என்பது தெரிந்தும், அவரிடம் வட்டியைக் கேட்பது பாவம் ஆகும். தனியாகவும், பொதுவாகவும் திருடக்கூடிய பல்வேறு வழிகள் இருக்கின்றன. நாம் பரிசுத்த ஆவியானவரின் நீதிக்குள் நம்முடைய மனச்சாட்சியை பழக்குவிக்கவில்லையென்றால், நம்முடைய நீதியையும், பணஆசை மற்றும் பிறர் செல்வம் மீதான பொறாமையினால் இரட்சிப்பையும் இழந்துபோகக் கூடிய அபாயத்தில் இருக்கிறோம். பவுல் தெளிவாகக் கூறுகிறார். “திருடரும், பொருளாசைக்காரரும்…. இறைவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. (1 கொரிந்தியர் 6:10)

இன்றைய நமது நவீன சமூகத்தில் களவு என்பது பல்வேறு வடிவங்களைப் பெற்றிருக்கிறது. சில மனிதர்கள் தங்கள் தனிப்பட்ட அழைப்புகளுக்காக, அலுவலக தொலைபேசியை பயன்படுத்துகிறார்கள். சிலர் கடைகளில் அல்லது சந்தையில் பார்க்கிற பொருளை விலைஎதுவும் கொடுக்காமல் எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் கார்களை திருடி, ஓட்டிச் செல்கிறார்கள். சிலர் போதைப் பொருட்களை இலவசமாக வினியோகித்து, அவர்கள் அதற்கு அடிமையாகும்படி செய்கிறார்கள். பிறகு அவர்களை கட்டாயப்படுத்தி போதைப்பொருட்களை விலைகொடுத்து வாங்கி, அந்த அடிமைத்தனத்தை தொடரும்படி செய்கிறார்கள். அவர்கள் அடிமையானோரை திருடும்படி செய்கிறார்கள். அல்லது பணத்திற்காக மற்ற குற்றச் செயல்களை புரியும்படி தூண்டுகிறார்கள். மற்றவர்களின் கணிப்பொறிக்குள் நுழைவது அல்லது விலை கொடுத்து வாங்காமல் மென்பொருளை பதிவிறக்கம் செய்வது திருட்டின் நவீன வடிவமாக இன்று அநேகரது மனச்சாட்சிகளை கெடுத்துக் கொண்டிருக்கிறது.

நாம் இயேசுவிடம் இருந்து புதிய இருதயத்தை பெற்றுக் கொள்ளாவிட்டால், நாம் அநேக சோதனைகளுக்கு இடம் கொடுத்து வீழ்ந்து போவோம். நம்முடைய வாழ்வின் முதன்மையான இலக்காக பணம் சேகரித்தல் இருக்கக் கூடாது என்பதில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் நாம் பொருள் சார்ந்தவர்களாக மாறிவிடுவோம். ஆண்டவர் தரும் மகிழ்ச்சியை இழந்துவிடுவோம். பொறாமையும், பண ஆசையும் தீமைகளுக்கு காரணங்களுக்காக இருப்பதை மறக்க வேண்டாம். பணத்தை தேடும் அனைவரும் தங்களது வாழ்வின் போக்கை மாற்றிக் கொள்கிறார்கள். அவனது இருதயம் கடினப்படுகிறது. அவனது அன்பு குளிர்ந்து போகிறது. அவன் செய்யும் அனைத்து காரியங்களும் பண ஆசையினால் வருகிறது. அவனது வாழ்வின் குறிமையமாக பணம் மாறுகிறது. இறைவன் அவனது மையமாக இருப்பதில்லை.

இயேசு செல்வங்களின் ஆபத்தில் சிக்கிக் கொள்வதைவிட, ஏழை மனிதனாக வாழ்வதையே தெரிவு செய்தார். அவர் தலை சாய்க்க கூட இடம் இல்லை. ஆண்டவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் பணப்பையை சுமக்கிறவனாக, திருடனாக இருந்தான். (யோவான் 12:6) இறுதியில் தூக்கில் தொங்கினான்.

பவுல் தனது சொந்தக் கைகளினால் கடினமாக உழைத்தான். மற்றவர்களுக்கு பாரமாக இருப்பதை அவன் விரும்பவில்லை. அவன் தனது சொந்த வாழ்விற்காக மட்டும் சம்பாதிக்கவில்லை. நற்செய்தி பிரசங்கிக்கப்படும்படியாக, மற்றவர்களுக்கும் உதவி செய்தான்.


4.10.4 - வேலை மற்றும் தியாகம்

அநேக புதிய விசுவாசிகள் பணம் மற்றும் வேலையைக் குறித்த தங்களது மனப்பான்மையை நேர்மையுடன் மாற்ற வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில் பிச்சை எடுப்பது அல்லது மற்றவர்களிடம் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பது கனத்திற்குரிய செயல் அல்ல. அது போதுமான வருமானத்தை உறுதியளிக்கக் கூடிய ஒன்றல்ல. கர்த்தருடைய விண்ணப்பத்தில் நான்காவது வேண்டுதல் “அன்றன்றுள்ள அப்பத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்பதாகும். நமக்கு சரியான வேலையை பரலோகப் பிதா கொடுக்க வேண்டும் என்று உறுதியாக நாம் அவரிடம் விண்ணப்பம் செய்வதை இது குறிக்கிறது. நாம் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், சுகத்துடனும், பெலத்துடனும் இருக்க அவரிடம் வேண்டுகிறோம்.

நாம் மெய்யாகவே இறைவனுடைய வழிநடத்துதலின் கீழ் வாழும்போது, கடினமாக உழைக்கும் போது, திருட வேண்டிய அவசியம் ஏற்படாது அல்லது மற்றவர்களின் பணத்தில் வாழவேண்டிய நிலையும் ஏற்படாது. ஏனெனில் நம்முடைய குடும்பங்களைத் தாங்குவதற்காக மட்டும் நாம் ஆசீர்வதிக்கப்படவில்லை. தேவையுள்ளோருக்கு நாம் உதவிட வேண்டும். மேலும் கர்த்தருடைய பணிக்கென நாம் கருத்துடன் காணிக்கைகளை செலுத்தி செயல்பட வேண்டும். வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் (அப்போஸ்தலர் 20:35; எபேசியர் 4:28; 1தெசலோனிக்கேயர் 4:11)

இறைபக்தியுள்ள மற்றும் பத்துக்கட்டளைகளை உண்மையுடன் கடைப்பிடித்து வாழக்கூடிய ஒரு பணக்கார வாலிபனை இயேசு ஒரு முறை சந்தித்தார். ஆண்டவர் அவனை நேசித்தார். அவனது மறைவான கட்டுகளில் இருந்து அவனை விடுவிக்க விரும்பினார். ஆகவே அவனிடம் கூறினார் “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.மத்தேயு 19:21. அந்த வாலிபன் இதைக் கேட்ட போது அவன் பணக்காரனாக இருந்தபடியால் துக்கமடைந்தான். அவன் இயேசுவை விட்டு விலகிச் சென்றான். இறைவனின் குமாரனைவிட பணம் அவனுக்கு அதிக முக்கியமாக இருந்தது. நாம் ஒவ்வொரு முறையும் நம்மைநாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் இயேசுவைப் பின்பற்றுவதுதான் நம்முடைய முதல் முக்கியத்துவமா? அல்லது நாம் நம்முடைய சொத்துகள் அல்ல வங்கியிருப்புகளில் நமது நம்பிக்கையை வைத்துள்ளோமா? (மாற்கு 10:19; லூக்கா 18:10). நாம் நம்முடைய நம்பிக்கையை பணத்தில் வைப்பதில் இருந்து நம்மை விடுவிக்க இயேசு விரும்புகிறார். நாம் அவருக்கு நம்மை ஒப்புவிக்க வேண்டும். வாழ்வில் தியாகம் தான் நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆண்டவர் அநேகரை மீட்கும் பொருளாகத் தம்மையே தந்தது போல, நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். எல்லா நடைமுறையான வழிகளிலும் மகிழ்ச்சியுடன் அதைச் செய்ய வேண்டும். பணத்தில் நம்பிக்கை வைப்பதில் இருந்து நம்மை விடுவிக்க இறைவன் விரும்புகிறார். அவர் மீது நாம் வைத்துள்ள நம்முடைய நம்பிக்கையை பெலப்படுத்துகிறார்.

ஆதித் திருச்சபை அங்கத்தினர்கள் ஆர்வத்துடன் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்த போது, ஆவிக்குரிய ஐக்கியத்தில் ஒருவரையொருவர் நேசித்தார்கள். அவர்கள் உடைமைகளை விற்றார்கள். அந்த வருமானத்தில் அவர்கள் இணைந்து வாழ்ந்தார்கள். மற்றவர்கள் மீதுள்ள அன்பினால் அவர்கள் தன்னார்வத்துடன் பணி செய்தார்கள். அவைகளைப் பகிர்ந்து கொள்ளும்படி, கம்யூனிசத்தைப் போல யாரும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. இருப்பினும் ஆதி கிறிஸ்தவ சபை இந்த சமூக அமைப்பை நீண்ட காலத்திற்கு கொண்டு செல்லவில்லை. அநேக கிறிஸ்தவர்கள் ஏழைகள் ஆனார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல கிறிஸ்து விரைவாக வரவில்லை. தேசமெங்கும் பஞ்சம் நேரிட்ட போது, அவர்கள் அதிகமாக துன்பப்பட்டார்கள். அச்சமயத்தில் பவுல் காணிக்கைகளைச் சேகரித்தார். இன்றைய கிரீஸ் மற்றும் துருக்கி பகுதியைச் சேர்ந்த அன்றைய சபைகளில் குறிப்பிடத்தக்க தொகையை சேகரித்து, எருசலேமில் உள்ள சபையிடம் ஒப்புவித்தான்.

வேலையின் நோக்கம் மற்றும் அர்த்தத்தை முற்றிலும் வேறுவிதத்தில் பவுல் கூறினான். “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். (கொலோசெயர் 3:24). ஒவ்வொரு கனத்திற்குரிய வேலையும் இறைவனுக்கு செலுத்தப்படும் ஆராதனையாகக் கருதப்படுகிறது. ஆகவே ஒரு தாய் அவளது குழந்தையை பராமரிப்பது அல்லது ஒருவன் தெருக்களை சுத்தம் செய்யும் வேலை அல்லது ஞாயிற்றுக்கிழமை ஒரு போதகர் பிரசங்கிப்பது மற்றும் ஒவ்வொரு நல்ல வேலையும் இறைவனுக்கு நேரடியான ஆராதனையாக இருக்கிறது. நம்மை நாமே சோதித்துப் பார்த்து கேட்க வேண்டும். “நாம் யாரை சேவிக்கிறோம்? நாம் நம்மையே சேவிக்கிறோமா? நமது குடும்பங்கள், தொழிலாளிகள், நமது நிலையை சேவிக்கிறோமா? அல்லது நாம் இறைவனுக்காக வாழ்கிறோமா? விண்ணப்பம் செய்தல் மற்றும் வேலை செய்தல் இரண்டுமே கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரமாக இருக்கிறது.


4.10.5 - இஸ்லாம் மற்றும் சொத்து

தாம் படைத்த அனைத்திற்கும், படைத்தவரே சொந்தக்காரர் என்பதை இஸ்லாம் உறுதிப்படுத்துகிறது. இறைவன் நம்மை நம்பிக்கொடுத்துள்ள தனிப்பட்ட சொத்துரிமையை அது ஏற்றுக்கொள்கிறது. செல்வவளம் என்பது இறைவனுடைய அருள் ஆகும். தொடர்ந்து விண்ணப்பம் செய்கிறவன் மற்றும் இஸ்லாமிய சட்டத்தின்படி வாழ்கிறவன் அதைப் பெறுவான். அவன் தனது கோத்திரத்தில் ஒரு அங்கமாக இருக்கிறான். சொத்துகள், எண்ணெய்க் கிணறுகள் மற்றும் நீரூற்றுகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு, அந்தக் கோத்திரத்திற்கு சொந்தமாக சந்ததிகளுக்கென்று இருக்கும். வயதானோர், வியாதியஸ்தர், முடவர் மற்றும் குற்றம் புரிந்தோருக்குக் கூட குடும்பம் என்பத பாதுகாப்பான புகலிடமாக இருக்கிறது. சமீப காலம் வரை மத்திய கிழக்கு பகுதிகளில் சமூக பாதுகாப்பு மற்றும் ஆயுள் காப்பீடு என்பது தேவையற்றதாக இருந்தது. ஆனால் நவீன தொழில்நுட்பத்தினால் நகரங்களில் வேலை செய்வோர் தனிமைப்படுத்தப்பட்டார்கள். தொண்டு நிறுவனங்கள் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் மத சம்பந்தமான வரி (ஜகாத்) மற்றும் தன்னார்வமாக கொடுப்போரின் பணம் (ஷடாகா) ஆகியவற்றால் நிதி ஆதாரம் பெறுகின்றன. இந்த ஏராளமான பணம் அனைத்தும் அவைகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. எவ்வித அரசாங்க மேற்பார்வையுமின்றி செலவழிக்கப்படுகின்றன. இவைகள் அனைத்தம் மத ஒழுங்குகள் என்று கூறப்படுகின்றன. இவ்விதமாக முஸ்லீம்கள் பரதீசுக்கு செல்லும்படி வழியைத் திறக்கிறார்கள். ஒருவன் இந்தப் பூமியில் மசூதியைக் கட்டினால், பரதீசில் அவன் ஒரு குடிலைப் பெறுவான் என்று நம்புகிறான்.

இஸ்லாம் முதலாவது தோன்றிய போது, முஸ்லீம் போராளிகளுக்கு வழங்கப்பட்ட அழிக்கும் போர் ஆயுதங்கள், இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாதோரின் மனங்களை தங்கள் பக்கம் திருப்பி வெற்றியடையத்தக்கதாக பயன்படுத்தப்பட்டது. முகம்மது காரணத்துடன் இந்த முறையை எதிரிகளிடமும் பின்பற்றினார். அவர்களது இருதயங்களை இஸ்லாமிற்கு திருப்ப செயல்பட்டார். ஒரு புற இனத்தவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், அவன் கொலை செய்யப்படுவான் அல்லது அடிமையாக்கப் படுவான். குரான் மற்றும் இஸ்லாமிய சட்டத்தின்படி, அடிமைகள் முஸ்லீம்களின் சொத்தாக மாறுகிறார்கள். திருமண வயதுள்ள அடிமைப் பெண்பிள்ளைகள் அவர்களது எஜமான்களால் பயன்படுத்தப்படுவார்கள். அந்த அடிமைகளின் பெற்றோர்கள் இதை அங்கிகரிக்க வேண்டும். இஸ்லாமிய உலகத்தில் அடிமை வியாபாரம் என்பது நீண்ட காலமாக செழித்து வளர்ந்தது. அமெரிக்காவில் ஏற்பட்ட ஒரு மக்கள் யுத்தத்தினால் இந்த அடிமை வியாபாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


4.10.6 - ஷரியாவில் திருடர்களுக்கான கொடுமையான தண்டனைகள்.

திருடர்களுக்கான கொடூரமான தண்டனைகளைக் குறித்து இஸ்லாம் கூறுகிறது. முதல்முறையாக அதிகமாக பணத்தை திருடிய ஒருவனது வலதுகை வெட்டப்பட வேண்டும். இரண்டாம் முறை தவறு செய்தவன் என்றால் இடது கால் அகற்றப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவு திருட்டின் விகிதம் இதனால் இஸ்லாமிய நாடுகளில் குறைந்துள்ளது. இந்த சட்டத்தை கடைப்பிடிக்க வைப்பதில் பயம் தான் முக்கிய இயக்கு விசையாக உள்ளது. இன்றும் ஈரான், சூடான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால் பொது இடங்களில் கைகள் மற்றும் கால்கள் துண்டிக்கப்படுகின்றன. கோமெய்னி என்பவர் எந்த மயக்கமருந்தும் கொடுக்காமல் திருடனின் கையை வெட்டுகின்ற அளவிற்கு சட்டம் இருந்தது. சூடானில் நான்கு ஆண்டுகளுக்கு இஸ்லாமிய சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அத்தருணத்தில் சட்டத்தினால் ஊனமாக்கப்பட்டவர்களுக்காக, நூறு கைகள் இணைந்த மக்கள் என்ற நிறுவனம் துவங்கப்பட்டது. அவர்கள் சட்டத்தினால் கைகள் துண்டிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் மற்றும் உதவியைத் தரும்படியாக கேட்டார்கள். இந்தக் குழுவில் இருந்து இரண்டு டஜன் மனிதர்களின் இடது கால்கள் துண்டிக்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் மறுபடியும் திருடினார்கள். “சூடான் இன்று” என்ற பத்திரிக்கையில் இப்படிப்பட்ட மனிதர்கள் துண்டிக்கப்பட்ட கைகளோடு இருக்கும் படம் வெளியிடப்பட்டது.

ஷரியாவை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்ட கடுமையான தண்டனைகள் திருடனின் மனப்பான்மையை சிறப்பானதாக மாற்றவில்லை. அது அவர்களை வேலை செய்ய முடியாதவர்களாக மாற்றியது. அவர்கள் பொது இடங்களில் எப்போதும் வெட்கத்துடன் காணப்படும்படி செய்தது. எல்லா நாடுகளிலும் திருடுகிறவர்களின் வலதுகை வெட்டப்பட்டால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். எத்தனை மக்கள் இரண்டு நல்ல கைகளுடன் இருக்க முடியும்? ஷரியா இன்றைக்கு பொருந்தக் கூடிய ஒன்றல்ல.


4.10.7 -இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் எவ்விதம் திருட்டை தடுக்க உதவினார்கள்?

திருட்டை மேற்கொள்ள இயேசு ஒரு சிறந்த வழியைக் கொடுத்தார். திருட்டிற்கான தேசத்தின் சட்டங்களை அவர் அழிக்கவில்லை. மாறாக திருடுகின்ற ஒவ்வொருவரின் தண்டனையாகிய நித்திய தண்டனையை அவர் தன் மீது ஏற்றுக்கொண்டார். அவருடைய பாடுகள் மற்றும் தியாக மரணத்தை நாம் நினைவுகூர்ந்து, நம்முடையதல்லாத எதையும் நாம் ஒருபோதும் தொடக்கூடாது.

திருட்டின் ஆவியிலிருந்து நம்மை சத்திய ஆவியானவர் விடுவித்திருக்கிறார். நம்முடைய பிதாவாகிய இறைவனை நம்பும்படியாக நம்முடைய புதுப்பிக்கப்பட்ட இருதயத்தை அவர் பெலப்படுத்துகிறார். கர்த்தருடைய விண்ணப்பத்தில் நாம் கூறுவது போல நமது அன்றன்றுள்ள அப்பத்திற்காக நாம் சம்பாதிக்கும் படி ஏற்ற வேலையை அவர் நமக்குத் தரும்படி கேட்க வேண்டும். நாம் கவலைகளில் மூழ்கிவிடக் கூடாது. ஏனெனில் பரலோகப் பிதா நம்மீது தனிப்பட்ட விதத்தில் கரிசனையுள்ளவராக இருக்கிறார். அவர் நம்மை கைவிட மாட்டார். எனவே பின்வரும் வசனம் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு பொருந்துகிறது. திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.(எபேசியர் 4:28)

இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு புதிய இருதயத்தை அருளுகின்றார். பணம் மற்றும் சொத்துகளை மையமாகக் கொண்டில்லாமல் ஒரு அர்த்தமுள்ள வாழ்வை வாழ முடியும். அன்பு மற்றும் அவர் மீதான வாஞ்சையினால் கட்டப்பட்ட ஆவிக்குரிய வாழ்வு வாழ முடியும். நம்முடைய ஆண்டவர் நம்மை கஞ்சத்தனம் மற்றும் பொறாமையில் இருந்து விடுவித்திருக்கிறார். ஒவ்வொரு பணக்காரனும் தன்னைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடிய பெரிதான சோதனையை சந்திப்பான் என்று அவர் நமக்கு கற்றக்கொடுக்கிறார். எனவே நாம் செலவழிப்பவற்றைக் குறித்து மறுபடியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இறைவனுக்கு நாம் செலவழிக்கக் கூடிய ஒவ்வொரு காசிற்கும் கணக்கு கொடுக்க வேண்டும். அவர் நமக்குக் கொடுத்திருக்கிற யாவற்றிற்கும் நாம் உக்கிராணக்காரர்களாக இருக்கிறோம்.

ஒரு கிறிஸ்தவ விசுவாசி ஏழையை அன்பு மற்றும் இரக்கத்துடன் கவனித்துப் பார்க்கிறான். அவர்களுக்கு உதவும்படி திட்டம்பண்ணுகிறான். அவர்கள் பொறுப்புள்ளவர்களாக வளர உதவுகிறான். நேர்மையாகவும், கடமை தவறாமலும் உழைக்க உதவுகிறான். அவர்கள் வேலை செய்யவே முடியாத நிலையில் இருக்கும் பட்சத்தில் தேவையுள்ளோர், அவர்களாகவே தங்கள் தேவைகளை சந்தித்துக் கொள்ளத்தக்கதாக ஞானமுள்ள வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். சபையின் ஒவ்வொரு அங்கத்தினனும் இதில் பங்கெடுக்கும்படி அழைக்கப்படுகிறான். “ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், செய்யாமற்போனால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும்”. ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்விலும் தண்டனையைக் குறித்த பயம் அல்ல, இறைவன் மீதான அன்பு தான் எல்லா பிரமாணத்திற்கும் மேலான ஒன்றாக உள்ளது. நம்முடைய பாவங்களை கல்வாரி சிலுவையில் செலுத்தப்பட்ட தியாகபலி தான் நிவர்த்தி செய்துள்ளது. நம்முடைய நற்செயல்கள் அல்ல. நாம் உண்மையுடன், மனதிருப்தியுடன் மற்றும் கடமையுணர்வுடன் வாழும்படி நம்மை இயேசுவானவர் வழிநடத்துவதற்காக அவருக்கு நன்றி கூறுவோம். சொத்துகள் குறித்த சட்டங்களை திணிப்பதன் மூலம் அல்லது வரிகளைச் செலுத்த சொல்வதின் மூலம் அல்லாமல் இயேசுவானவர் அவரைப் பின்பற்றுவோரின் இருதயங்கள் மற்றும் மனங்களை மாற்றி அமைக்கிறார். அவருடைய இந்த செயல்மூலம் காலங்கள் தோறும் கலாச்சாரங்களில் நல் மாற்றம் ஏற்படுகின்றது. அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும்வந்தார் என்றார்.(மத் 20:28)

www.Grace-and-Truth.net

Page last modified on March 16, 2015, at 02:23 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)